Friday, August 15, 2014

“அண்ணாந்து மலைத்த அண்ணாமலை எங்கள் அருகில்”

அரவிந்த அன்னை சரணம்.


நீலு அண்ணல் –
“அண்ணாந்து மலைத்த அண்ணாமலை எங்கள் அருகில்”
By S.B.காந்தன் – Director





நாங்கள் இளமையில் அண்ணாந்து மலைத்த அண்ணாமலை, எங்கள் அட்ரஸ் மதித்து அருகில் வந்த ஆர்பரிப்பே, அண்ணல் நீலு அவர்கள் எங்கள் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவில் அடியெடுத்து வைத்தபோது ஏற்பட்டது.
விவேகா பைன் ஆர்ட்ஸ் குழுவில் திரு சோ, திரு அம்பி இவர்களொடு
நீலு அண்ணல் அடித்த கொட்டம் எங்கள் கனவிலிருந்து கைவசமானது, உற்ற நண்பர் விச்சு அண்ணா மூலம். கிரேஸி டைம்ஸ் டி.வி. தொடருக்காகக் கை குலிக்கியபோது.

He literally rubbed his energy and enthusiasm on us.He was always the most smartly dressed and the most mischievous person in the shooting floor. As a person fortunate to direct this stalwart, I can vouch for the fact that he was indeed “ a director’s delight”. 

வசனங்களை வெரும் உமிழ்வாக இல்லாமல் அவரது body language, முக பாவம், குரல் ஏற்ற இரக்கங்கள், timing இவற்றோடு அவருக்கே தனித்துவமான சென்னைத் செந்தமிழ் அல்லது கர்னாடக இசையோடு கவரில் போட்டு காட்சியில் இடும் போது, கட் சொல்ல மறந்து காமிராவை ஓடவிட்டிருக்கிறேன். நான் ஸ்கிரிப்டில் கட் செய்த வசனங்களைக் கண்டும் காணாதது போல் சேர்த்து சொல்லும் passion கண்டு சிரித்துக்கொண்டே கட் சொல்லியிருக்கிறேன்.

“ஒங்க அடுத்த புது டிராமல நான் வேஷம் போடறேன்” என்று அவருக்கே உறிய பாணியில் நீலு அண்ணல் அறிவித்த போது நாங்கள் அலறினோம். ஆனந்தத்தில் அல்ல. இந்த VIP க்கு தகுந்த வசதி செய்து தரமுடியுமா என்ற பயத்தில். உடன் ஒப்புதல் சொல்ல முடியவில்லை. மையமாக தலையாட்டி வைத்தோம்..

கிரேஸி மோகனுக்கு கிரேஸி டைம்ஸ் டிவி தொடரில் மலைவாசியினருக்கும் நகர வாசிகளுக்கும் நடக்கும் கிரிக்கட் போட்டி என்ற ஒரு அற்புதக் கதை உதயமாக, அவசர அவசரமாக உதக மண்டல பிரியாணம் ஏற்பாடாகியது. இரயில் முன் பதிவு மிகவும் பின் பதிவாகிவிட்ட அவசரம். கிடைத்த டிக்கெட்டை கவ்விக் கொண்டு இரயில் பெட்டியில் தாவிய நேரம். குரட்டை சத்தம் கேட்டு நிமிர்ந்தால்... இரண்டாம் வகுப்பு Side Upper Berth ல் தன் ஆறடி உடம்பை அறை உடம்ப்பாக்கி ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தவர் நாங்கள் VIP Treatment தர முடியுமா என்று அஞ்சிய Very Intimate Personality நீலு அவர்கள். 


உதக மண்டலத்தில் சூரியன் உதயமாகும் முன் அண்ணல் கேட்ட வேஷம் கிரேஸி மோகன் மூளையில் உதயமாகி சாக்லெட் கிருஷ்ணாவில் இன்று வரை 700 முறை திகட்டாமல் தித்தித்து வருகிறது.


உலகில் எந்த முலையில் எந்த வேலையில் இருந்தாலும் அவ்வப்போது தவராமல் வரும் sms:  “Enyoing Your Jery film in Raj Tv now. Hilarious”.
விச்சு அண்ணா தயாரித்து கிரேஸி மோகன் கை வண்ணத்தில் நான் இயக்கிய “ஜெரி” நகைச்சுவைப் படத்தின் நிர்வாகப் பொருப்பு ஏற்றார் நீலு அண்ணல். சினிமாவிற்கே உண்டான தேவையற்ற ஆடம்பர செலவுகளை சிரித்தபடி குட்டி குட்டியே குள்ளமாக்கியவர். சினிமாவில் வேண்டாத வீண் செலவு விபரம் அறிய விரும்பும் இளம் தயாரிப்பாளர்கள் நீலு அவரிகளிடம் ஒரு Crash Course எடுத்துக் கொண்டால் அவர்கள் கஜானா Crash ஆகாமல் இருக்கும். 


பொது மக்களிடம் தனக்கு இருக்கும் புகழைத் தனக்காக உபயோகிப்பது இயல்பு. சிக்னலில் நிக்காமல் போகும் காரை இடைமறிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளே அமர்ந்திருப்பது ஒரு பிரபலம் என்று அறிந்ததும் அசடு வழியும் முகத்தை துடைக்க எடுத்த கையால் சல்யூட் அடித்து புறமுதுகு காட்டுவது இயல்பு.

அனால், இந்த பிரபலம் உனக்கு ஒரு உதவி உடனே தேவையென்று அறிந்தால், அமர்களமான டி ஷர்ட் ஜீன்ஸ் உடன் செண்ட் வாசனைத்
தூக்க, தன் மாருதி காரில் தாவி, சன்ஜை சுப்ரமணியனின் தோடி காதில் ஒலிக்க, வழியில் வாங்கிய வாசனைப் பான் வாயை நிறப்ப, வலியச்சென்று பல அரசாங்க வாயில்களைத் திறக்கவைத்து வெற்றி வாகை சூடித் திரும்பும் திறன் மட்டுமல்ல, மனமும் படைத்தவர். எங்கள் குழுவின் கடை நிலை ஊழியர் கூட கையில் பாஸ் போர்ட் வைத்திருக்கும் கதையல்ல நிஜம் நீலு அவர்களின் மனம்.

Let me put forth two prayers to God:
1.    Let this phenomenon by name R.Neelakantan continue to live the way he likes
2.    If we happen to live this long let us live like him too.
























Sunday, December 8, 2013

"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.


"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய இரண்டாவது உரை. 

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன். 

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம். 

கவிஞர்கள் போக்கே தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் ஒரு பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா? 

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே இன்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? 

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? 

சுகமாக வாழ்வதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளில் இருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா? 

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல், தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை. 

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார். 

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை! 

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். 

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது. 

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று. 

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார். 

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; 

ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. 

Friday, May 24, 2013

LALGUDI'S NECTAR DROPS - 6 LINKS

For the 80th Birth day celebrations of the legend Lalgudi Sri G Jayaraman, I was fortunate to edit and direct "LALGUDI NECTAR DROPS" which is a string of unfurling from the disciples of this great guru. These views are very different from what we know of the legend as his disciples were so fortunate to be proximate to him, his day to day and his music. SIX such short capsules are uploaded here.  These are Swathi Sanskriti Series Presentation.

Thursday, August 9, 2012


DIVINE PLEA FOR CONTRIBUTION

The divine dream of our father Brahmasri T S Balakrishna Sastrigal of resurrecting the 
Unique Temple for Epilepsy and Nervous Cure is in the process of being fulfilled with the 
blessings of Sri Badravalli samedha Sri Badrawalleeswarar at Thiruveezhimizhalai.

Kindly find attached here the lattest photos depicting the fact that Thiruppani work has
reached an advance stage.

Thavathiru Aadheenam of Thiruvavaduthurai has approved 30th November 2012 for 
Maha Kumbabishekam. 

The estimated budget for balance of work and Maha Mumbabishekam is Rs 10 Lakhs.

It is time all the noble minded Bhakthas to participate in the final stages of the 
Thiruppani and the Maha Kumbabishekam.

Subha Dhinam.

TSBK Moulee / S B Khanthan / Sankari Ramanarayanan
Trustees, Sri Badravalleeswarar Kovil Kaingairya Trust

Smt Mahalakshmi Subramanian and Shri V.C.Subramanian
Mahalakshmi Charitable Trust



Saturday, February 18, 2012

                                     STATUS OF DIVINE WORK

We feel glad to update you on the progress of Thirupani at Sri Badravalli samedha Sri Badravalleeswarar Kovil at Thiruveezhimizhalai, a Unique temple for Epilepsy and Nervous Cure.

Please find attached the recent photos of work in progress. With the first Rs 3 Lakhs of the total of Rs 20 Lakhs, needed for this divine project, contributed by Family and Friends:

1.  New Ambal Sannadhi is raised up to Kopuram level
2.  New Murugar Sannadhi is raised up to Kopuram Level
3. Reconstruction work on Vinayakar and Badravalleeswarar Sannadhi Kopurams are underway.

Yesterday, the second lot of Rs 3.00 Lakhs contributed by Family and Friends has been provided to the Stapathy. This will bring all the kopurams to shape.

Major work like construction of Mani Mantap, Resurrecting the NIVARANA SAROVAR (Vali Theertham), raising the temple compound wall, raising chandikeswarar sannadhi, providing bathing, changing and toilet facilities for devotees, raising the front arch, flooring etc are remaining.

As you all know, even a pie contributed to  resurrecting a SHIVAALAYAM
provides benefits to generations in thousand folds.

We solicit your participation in this Divine Endeavor.

Subha Dhinam

TSBK Moulee /  S B Khanthan / Sankari Ramanarayanan
Trustees, Sri Badravalleeswarar Kovil Kaingarya Trust.




Sunday, January 8, 2012

                                                           
இந்த மாமனிதருடன் நானும் பழகி இருக்கிறேன், வேலை செய்திருக்கிறேன் என்று பெருமையுடன் நினைவு கூறுகிறேன்
சுஜாதாவின் ஒரு கட்டுரை.

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!" சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து
கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து
உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!"
என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.
இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள்
ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்!
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில்
அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு
பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’
என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல்
இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இ டையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive
compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்...
முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில்
இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்...
"நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத்
தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு
அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க
வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த
சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த
நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்


--





Sunday, January 1, 2012

TSB's Wish Getting Fulfilled

WISHING YOU A HAPPY AND SUCCESSFUL 2012.


Brahmasri T S Balakrishna Sastrigal through out his life had one wish very close to his heart. That is to resurrect the unique temple of Sri Badravalleeswarar at Thiruveezhimazhalai near Kumbakonam. Despite his repeated attempts, the wish left unfulfilled during his life time for various reasons.
Now, we have taken up this mission as our life ambition as also a New Year Resolution - 2012. On this Happy Day 1 of 2012 we extend our hands towards you all to associate and participate in our endeavor to accomplish this goal together.

Several decades back, our Great Grand Father Brahmasri Venkata Subramaniya Ganapaadigal  ( >father of Brahmasri Sambamoorthy Ganapaadigal > father of Brahmasri T S Balakrishna Sastrigal) Who was then the chief of Veda Paaraayanam at Thiruvidaimarudur Mahalinga Swamy Temple, happen to take a nap under a tree near a huge well after finishing Veda Paaraayanam at the near by Thiruveezhimazhalai Veezhi Naadhar Temple. His hands touched something silky like the feel of a snake. He woke up to find the same as the top of a Siva Linga buried underneath. With the help of farmers nearby he unearthed a full fledged Siva Temple - Siva Lingam, A beautiful Ambal Statue, A unique Vinayaka and a Nandi.
He swiftly searched through the archives for the Sthalapuranam and got this truth unearthed:
Several 100 years ago, a queen by name Badravalli was suffering for Epilepsy, Nervous Problem and Nauseating skin disorder. She went on a penance seeking a cure. Lord Dhakshina moorthy appeared in her dream and prescribed that she must take bath in the Sarva Roha Nivarini Well at Thiruveezhimazhalai, instal a Siva Linga and Ambal at its shores and pray for 48 days.
She dutifully did so and got her ailments remedied magically. She built this temple
around the divine well and Lord Siva and Goddess Parvathy descended here as the incarnation of Badravalleswarar and Badravalli respectively to cure the incurable ailments of man kind.
Our Great Grand Father sprung in to action. Using whatever resource he could muster, he built a beautiful temple. Not to keep Siva as our own property, he handed over the ownership of the temple to the nearby Thiruvaaduthurai Aadheenam who also manage the Veezhinaathar Temple at Thiruveezhimazhalai. To augment resources for its maintenance he also donated his humble land holdings.

Lots of devotees with various nervous and epileptic ailments got cured by divine grace of Badravalli samedha Sri Badravalleeswarar and the holy dip at the divine Well.
But as years rolled by, the focus on the maintenance of this temple got murkier.  Ambal Shrine caved in and the statue was accommodated inside the main Siva Shrine. The divine well needed purification and the surroundings were full of shrubs and thorns, unfit for worship.
TSB's earnest attempts to resurrect the temple, based in Chennai and touring through out the country for his Harikatha, did not bear fruits.  All that  could done was to send money to a local prohit to perform daily pooja and Neivedyam. The shrine was otherwise locked up and not worshiped.

Badravalleeswarar has now chosen to come out of his isolated Thapas and be open to devotees to shower his blessings. Yes, we have recently tumbled on a unique Lady
by name Mahalakshmi who along with her husband has taken the task of refurbishing dilapidated temples in Tamil Nadu as their life time mission through their Organisation know as MAHALAKSHMI CHARITABLE TRUST.

To view their activities pl visit:


This 60 year old couple have resurrected 22 temples so far and work on 45 more are
underway.
By grace of Badravalleswarar, Smt Mahalakshmi has kindly accepted to include our own Badravalleswarar project as their 46th in progress. She has also obtained the necessary permission and blessings from the Aadheenam.
While Smt Mahalaksmi and her husband Sri V C Subramaniyam are blessed by Paramacharyal with enough expertise to carry out such monumental work, a humble request is put forth before every true devotee to contribute to the cost of building this temple, the total of which at this point is estimated by the Sthapathy as Rs 20 Lakhs.
Thiruppani Work will commence on 21st January 2012. A formal invitation in Tamil is attached.
Also find attached herewith the snaps of the temple as it stands today.
Every pie we contribute - every brick that we place to build a SHIVAALAYAM is equivalent to embellishing lives of our generation by thousand folds.

We once again cordially solicit the hearty participation of you all.