This is the script of my speech at Cancer Alleviation Society of Dr Vijayaraghavan (Patterson Cancer Centre) where 500 students from all over Tamil Nadu were invited for a day long session on various facts about cancer - prevention and cure.
Even experts revisit their basics often to refind themselves. Carnatic Music legends, I have heard that practice SARALI VARISAI and such other BAALA PAATAMS often to keep themselves on the right track. This is one such BAALA PAATAM.
Even experts revisit their basics often to refind themselves. Carnatic Music legends, I have heard that practice SARALI VARISAI and such other BAALA PAATAMS often to keep themselves on the right track. This is one such BAALA PAATAM.
மாணவ மணிகளே, நீங்கள் அனைவரும் ஒரு நல்ல தகவலை தெரிந்து கொள்ள இங்கே கூடியிருக்கிறீர்கள்.
இந்த பருவத்தில் உங்களுடைய அலுவல் என்ன? கற்பது.
பல நல்ல விஷயங்களை கற்பதற்குத்தான் இங்கே வந்திருக்கிரிர்கள்.
உங்களில் யாருக்காவது கிருபானந்தவாரியாரைப் பற்றித் தெரியுமா?
யார் அவர்?... சுழற்பந்து வீச்சாளரா... வேகப்பந்து வீச்சாளரா... யார் அவர்?
ஆம்... அவர் ஒரு சமய சொற்பொழிவாளர்... நன்று.
அவர் பல நல்ல தகவல்களை இசையோடு கொடுக்கக்கூடிய மகான். அவர் கூறுவார்... கற்க - தெரிந்து கொள்ளுங்கள்... எப்படி? கசடற,... அதென்ன கசடற?
இன்று உங்கள் வீட்டில் பண்டிகை... உங்கள் தாயார்... டேய் சோமு... இன்று பண்டிகை... பாயசம் வைக்க வேண்டும்... கடைக்குச் சென்று அதற்கான பொருட்களை வாங்கிட்டு வா என்று கூறுகிறார். நீங்களும் கடைக்குச் செல்கிறீர்கள். "அண்ணே, இன்று எங்கள் வீட்டில் பண்டிகை... பாயசம் வைக்க வேண்டும்... சர்க்கரை, வெல்லம், முந்திரிபருப்பு, திராட்சை கொடுங்க என்பீர்கள்.
இல்லை கடைக்காரரிடம் இப்படி கேட்பீர்களா?... "அண்ணே இன்று எங்கள் வீட்டில் பண்டிகை, பாயசம் வைக்க வேண்டும்... அதற்குத் தேவையான பினாயில், சர்ப் எக்ஸெல், டெட்டால் கொடுங்க..". நிச்சயம் இப்படி கேட்க மாட்டீர்கள் அல்லவா!
எனவே, - கற்க அதாவது பாயசம், கசடற அதாவது சர்க்கரை... பினாயில் இல்லை... நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறீர்கள்... தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
நல்ல விஷயங்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.
பொழுதுபோக்கு, உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமா, சீட்டாட்டம், அரட்டை அடிப்பது இப்படி பல... எல்லாமே பொழுதுபோக்கு அம்சங்கள் என்று நினைக்கிறோம். ஆனால், மிகச் சிறந்த பொழுதுபோக்கு எது என்றால், நமது வேலையை சந்தோஷமாகச் செய்வதுதா ன்.
THE BEST FORM OF ENTERTAINMENT IS WORK ENJOYED .
மாணவ மணிகளான உங்களது வேலை என்ன? கற்றல்.
நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளுதல். அதை எப்படி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால்... சந்தோஷமாகவும், மகிழ்ச்கியாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்படி மகிழ்ச்சியாகக் கற்றுக் கொள்வது...
உங்களில் யாருக்காவது லால்குடி ஜெயராமன் அவர்களைத் தெரியுமா?... யார் அவர்? ஹர்பஜன் சிங்கின் சகோதரரா? யார் அவர்?
ஆம், அவர் ஒரு கர்நாடக இசை வயலின் மேதை... அகில உலக மேதை. அவரிடம் வயலின் கற்றுக் கொள்ள உங்களைப்போல் மாணவ மாணவியர் அனைவரும் வருவார்கள். பெண்களாக இருந்தால் இந்நேரம் தோழிகளுடன் chat செய்து கொண்டிருக்கலாமே என்று தோன்றலாம். ஆண்களாக இருந்தால்... என்னடா இது, இன்று ஐபிஎல் மேட்ச் இருக்கிறது... இப்படி வயலின் கற்க வந்திருக்கிறோமே... இப்படி எண்ண அலைகள் ஓடுவது இயல்பு.
கர்நாடக இசையை கற்றுக்கொள்வது என்பதில் ஒரு சின்ன பயம்... எல்லாவற்றையும் மீறி ஆசிரியரோ ஒரு ஜாம்பவான். அனைவரும் ஒருவித கிலியில் அமர்ந்திருப்பார்கள். அவர் வந்தவுடன்... கடுமையான குரலில் "எல்லோரும் வயலினை எடுங்கள்... இந்த ராகத்தில் வாசியுங்கள்" என்றா கூறுவார்...
அவர் ஒரு மாமேதை அல்லவா.
அவர் என்ன செய்வார்... ஒரு பெண்ணைப் பார்த்து...
"மீரா, சமீபத்தில் நீ என்ன திரைப்படம் பார்த்தாய், அப்படத்தில் உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்"
அந்த மாணவி திகைத்துப் போவாள்... பின் சுதாரித்துக் கொண்டு... "நான் அலைபாயுதே படம் பார்த்தே ன்"...
மேதை பதிலுக்கு : "அதில் வரும் 'சிநேகிதனே' பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு இல்ல.
அதே பாட்டை அந்த வயலின் மேதை வயலினில் வாசித்துக் காண்பிப்பார். ஒரு கர்நாடக மாமேதை அக்குழந்தைகளின் அளவுக்கு இறங்கி வருவார்.
அதோடில்லாமல் அங்குள்ள அனைவரையும் அந்த பாட்டை வயலினில் வாசிக்கச் சொல்வார். ஒரே நிமிடத்தில் இறுக்கமாக இருந்த அந்த அறையில், மகிழ்ச்சி பொங்கும். இதற்கிடையில் அவர் சொல்லித் தர இருந்த கீர்த்தனையும் அந்தக் கடினமான ராகமும் தாளமும் அவர்களுக்குள் எப்போது சென்றடைந்தது என்று அவர்கள் உணரும் முன் அவற்றை கற்றிருப்பார்கள்.
"HAPPY LEARNING LEADS TO WISDOM . PAINFUL LEARNING BURSTS AS A BUBBLE ". என்று சொல்வது இதற்காகத்தான்.கற்றுக் கொள்வதை மகிழ்சிகரமாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
கணக்கென்றால் பலருக்கும் கசப்பு. எல்லோரும் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறீர்கள்... கணக்கு வாத்தியார் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்... ஆனால் உங்கள் காதுகளும், கண்களும் மூடி இருக்கும். அதனால் அந்தக் கணக்கு உங்களைச் சுற்றி சுற்றி சுற்றி வந்து ஒரு ஸ்டேஜில் ஒன்றுமே செய்ய முடியாமல் அப்படியே தவிக்கும்... மணி அடித்தவுடன் எல்லோரும் வீட்டிற்கு சென்று விடுவீர்கள்... அந்தக் கணக்கு என்ன செய்வது என்று அறியாமல் அது பின்பக்கமாகப் போய்விடும்.
கணக்கை காதலிக்க ஆரம்பியுங்கள். உங்களால் கவரப்பட்டு உங்களுடைய காது, கண்கள் வழியாக கணக்கு மூளையில் சென்று பதமாக அமர்ந்துவிடும். பரிட்சை பேப்பரில் 100 மார்க்குகளாக வந்து விழும்.
இன்றைக்கு கேன்சரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். கேன்சரை பூரணமாக குணமாக்க முடியும் என்பதை இங்கு வந்த அனைத்து cancer ambassadorsகளும் [ அந்த நோய் வந்து பூரண குணம் அடைந்தவர்கள் ] கூறினார்கள் . ஆதலால்... நீங்கள் இதனை மகிழ்ச்சியோடு தெரிந்து கொள்ளுங்கள்... கடமையே என்று தெரிந்து கொள்ளாதீர்கள். அப்பொழுதுதான் அத்தகவல்கள் உங்களுடைய காது, கண்களின் வழியாகப் போய் மூளையில் அழகாக அமர்ந்து கொள்ளும்.
உங்களுக்குள் பல டாக்டர்கள் இருப்பீர்கள்... இன்று நீங்கள் தெரிந்து கொள்ளும் அனைத்துத் தகவல்களையும் பதமாக வைத்துக் கொள்ளுங்கள்....
வீட்டிற்குச் சென்று உங்கள் உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்... தகவல்கள் என்றுமே அழியாது... ஊசிப்போகாது.
என்றோ ஒரு நாள் உங்களுடைய வாழ்க்கையில் அந்த
" RECALL அந்த DOWNLOAD WILL HELP YOU ".