Tuesday, September 13, 2011

தெரிந்து கொள்வோம் ... எதை ... எப்படி...


This is the script  of my speech at Cancer Alleviation Society of Dr Vijayaraghavan (Patterson Cancer Centre) where 500 students from all over Tamil Nadu were invited for a day long session on various facts about cancer - prevention and cure. 


Even experts revisit their basics often to refind themselves. Carnatic Music legends, I have heard that  practice SARALI VARISAI  and such other BAALA PAATAMS often to keep themselves on the right track. This is one such BAALA PAATAM.

மாணவ மணிகளே, நீங்கள் அனைவரும் ஒரு நல்ல தகவலை தெரிந்து கொள்ள இங்கே கூடியிருக்கிறீர்கள்.
இந்த பருவத்தில் உங்களுடைய அலுவல் என்ன?    கற்பது.
பல நல்ல விஷயங்களை கற்பதற்குத்தான்  இங்கே வந்திருக்கிரிர்கள்.
உங்களில் யாருக்காவது கிருபானந்தவாரியாரைப் பற்றித் தெரியுமா?
யார் அவர்?... சுழற்பந்து வீச்சாளரா... வேகப்பந்து வீச்சாளரா... யார் அவர்?
ஆம்... அவர் ஒரு சமய சொற்பொழிவாளர்...  நன்று.
அவர் பல நல்ல தகவல்களை இசையோடு கொடுக்கக்கூடிய மகான். அவர் கூறுவார்... கற்க - தெரிந்து கொள்ளுங்கள்... எப்படி? கசடற,... அதென்ன கசடற?
இன்று உங்கள் வீட்டில் பண்டிகை... உங்கள் தாயார்...  டேய் சோமு...  இன்று பண்டிகை... பாயசம்  வைக்க  வேண்டும்... கடைக்குச் சென்று அதற்கான பொருட்களை வாங்கிட்டு வா என்று கூறுகிறார். நீங்களும் கடைக்குச் செல்கிறீர்கள். "அண்ணே, இன்று எங்கள் வீட்டில் பண்டிகை... பாயசம் வைக்க வேண்டும்... சர்க்கரை, வெல்லம், முந்திரிபருப்பு, திராட்சை கொடுங்க என்பீர்கள்.
இல்லை கடைக்காரரிடம் இப்படி கேட்பீர்களா?... "அண்ணே இன்று எங்கள் வீட்டில் பண்டிகை, பாயசம் வைக்க வேண்டும்... அதற்குத் தேவையான பினாயில், சர்ப் எக்ஸெல், டெட்டால் கொடுங்க..". நிச்சயம் இப்படி கேட்க மாட்டீர்கள் அல்லவா!
எனவே, - கற்க அதாவது பாயசம், கசடற அதாவது சர்க்கரை... பினாயில் இல்லை... நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறீர்கள்... தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
நல்ல விஷயங்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.
பொழுதுபோக்கு, உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமா, சீட்டாட்டம், அரட்டை அடிப்பது இப்படி பல... எல்லாமே பொழுதுபோக்கு அம்சங்கள் என்று நினைக்கிறோம். ஆனால், மிகச் சிறந்த பொழுதுபோக்கு எது  என்றால், நமது  வேலையை  சந்தோஷமாகச்  செய்வதுதான். 
THE  BEST  FORM  OF  ENTERTAINMENT  IS  WORK  ENJOYED .

மாணவ மணிகளான உங்களது வேலை என்ன? கற்றல்.
நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளுதல். அதை எப்படி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால்... சந்தோஷமாகவும், மகிழ்ச்கியாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

எப்படி மகிழ்ச்சியாகக் கற்றுக் கொள்வது...
உங்களில் யாருக்காவது லால்குடி ஜெயராமன் அவர்களைத் தெரியுமா?... யார் அவர்?  ஹர்பஜன் சிங்கின் சகோதரரா? யார் அவர்?
ஆம், அவர் ஒரு கர்நாடக இசை வயலின் மேதை... அகில உலக மேதை. அவரிடம் வயலின் கற்றுக் கொள்ள உங்களைப்போல் மாணவ மாணவியர் அனைவரும் வருவார்கள். பெண்களாக இருந்தால் இந்நேரம் தோழிகளுடன் chat  செய்து கொண்டிருக்கலாமே என்று தோன்றலாம். ஆண்களாக இருந்தால்... என்னடா இது, இன்று ஐபிஎல் மேட்ச் இருக்கிறது... இப்படி வயலின் கற்க வந்திருக்கிறோமே... இப்படி எண்ண அலைகள் ஓடுவது இயல்பு.

கர்நாடக இசையை கற்றுக்கொள்வது என்பதில் ஒரு சின்ன பயம்... எல்லாவற்றையும் மீறி ஆசிரியரோ ஒரு ஜாம்பவான். அனைவரும் ஒருவித கிலியில் அமர்ந்திருப்பார்கள். அவர் வந்தவுடன்... கடுமையான குரலில் "எல்லோரும் வயலினை எடுங்கள்... இந்த ராகத்தில் வாசியுங்கள்" என்றா கூறுவார்... 

அவர் ஒரு மாமேதை அல்லவா.

அவர் என்ன செய்வார்... ஒரு பெண்ணைப்  பார்த்து...

"மீரா, சமீபத்தில்  நீ என்ன திரைப்படம்  பார்த்தாய்,  அப்படத்தில் உனக்கு  என்ன பாட்டு  பிடிக்கும்"

அந்த மாணவி  திகைத்துப்  போவாள்... பின்  சுதாரித்துக்  கொண்டு... "நான் அலைபாயுதே படம் பார்த்தேன்"...

மேதை பதிலுக்கு : "அதில்  வரும்  'சிநேகிதனே'  பாட்டு  ரொம்ப  நல்லாயிருக்கு  இல்ல.     
அதே  பாட்டை  அந்த  வயலின்  மேதை  வயலினில்  வாசித்துக்  காண்பிப்பார். ஒரு கர்நாடக மாமேதை  அக்குழந்தைகளின்  அளவுக்கு  இறங்கி  வருவார்.
அதோடில்லாமல்  அங்குள்ள அனைவரையும் அந்த பாட்டை வயலினில் வாசிக்கச் சொல்வார். ஒரே நிமிடத்தில் இறுக்கமாக இருந்த அந்த அறையில், மகிழ்ச்சி பொங்கும். இதற்கிடையில் அவர் சொல்லித் தர இருந்த கீர்த்தனையும் அந்தக் கடினமான ராகமும் தாளமும் அவர்களுக்குள் எப்போது சென்றடைந்தது என்று அவர்கள் உணரும் முன் அவற்றை கற்றிருப்பார்கள்.

"HAPPY  LEARNING  LEADS  TO  WISDOM . PAINFUL  LEARNING  BURSTS  AS  A  BUBBLE ".  என்று சொல்வது இதற்காகத்தான்.கற்றுக் கொள்வதை மகிழ்சிகரமாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
கணக்கென்றால் பலருக்கும் கசப்பு. எல்லோரும் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறீர்கள்... கணக்கு வாத்தியார் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்... ஆனால் உங்கள் காதுகளும், கண்களும் மூடி இருக்கும். அதனால் அந்தக் கணக்கு உங்களைச் சுற்றி சுற்றி சுற்றி வந்து ஒரு ஸ்டேஜில் ஒன்றுமே செய்ய முடியாமல் அப்படியே தவிக்கும்... மணி அடித்தவுடன் எல்லோரும்  வீட்டிற்கு சென்று  விடுவீர்கள்... அந்தக் கணக்கு என்ன செய்வது  என்று அறியாமல்  அது  பின்பக்கமாகப்  போய்விடும். 

கணக்கை  காதலிக்க  ஆரம்பியுங்கள். உங்களால்  கவரப்பட்டு   உங்களுடைய  காது, கண்கள்  வழியாக கணக்கு மூளையில் சென்று பதமாக  அமர்ந்துவிடும். பரிட்சை பேப்பரில் 100  மார்க்குகளாக வந்து விழும். 
இன்றைக்கு  கேன்சரைப்  பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். கேன்சரை  பூரணமாக  குணமாக்க  முடியும் என்பதை  இங்கு  வந்த  அனைத்து cancer ambassadorsகளும் [ அந்த நோய் வந்து  பூரண குணம் அடைந்தவர்கள் ]  கூறினார்கள் . ஆதலால்... நீங்கள் இதனை  மகிழ்ச்சியோடு  தெரிந்து கொள்ளுங்கள்... கடமையே  என்று தெரிந்து கொள்ளாதீர்கள். அப்பொழுதுதான்  அத்தகவல்கள்  உங்களுடைய காது,  கண்களின்  வழியாகப்  போய் மூளையில் அழகாக  அமர்ந்து கொள்ளும்.
உங்களுக்குள்    பல டாக்டர்கள்  இருப்பீர்கள்... இன்று நீங்கள் தெரிந்து கொள்ளும் அனைத்துத்  தகவல்களையும்  பதமாக வைத்துக்  கொள்ளுங்கள்.... 
வீட்டிற்குச்  சென்று உங்கள் உற்றார்  உறவினர்களிடம்  பகிர்ந்து  கொள்ளுங்கள்... தகவல்கள்  என்றுமே  அழியாது... ஊசிப்போகாது. 
என்றோ  ஒரு நாள்  உங்களுடைய  வாழ்க்கையில்  அந்த 
" RECALL  அந்த  DOWNLOAD  WILL  HELP  YOU ". 

Monday, March 14, 2011

AMBAKAVAHA

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்!


ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.
ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.
ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து. இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி. முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.
அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார். அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம். ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.
நன்றி – கல்கி