Friday, August 15, 2014

“அண்ணாந்து மலைத்த அண்ணாமலை எங்கள் அருகில்”

அரவிந்த அன்னை சரணம்.


நீலு அண்ணல் –
“அண்ணாந்து மலைத்த அண்ணாமலை எங்கள் அருகில்”
By S.B.காந்தன் – Director





நாங்கள் இளமையில் அண்ணாந்து மலைத்த அண்ணாமலை, எங்கள் அட்ரஸ் மதித்து அருகில் வந்த ஆர்பரிப்பே, அண்ணல் நீலு அவர்கள் எங்கள் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவில் அடியெடுத்து வைத்தபோது ஏற்பட்டது.
விவேகா பைன் ஆர்ட்ஸ் குழுவில் திரு சோ, திரு அம்பி இவர்களொடு
நீலு அண்ணல் அடித்த கொட்டம் எங்கள் கனவிலிருந்து கைவசமானது, உற்ற நண்பர் விச்சு அண்ணா மூலம். கிரேஸி டைம்ஸ் டி.வி. தொடருக்காகக் கை குலிக்கியபோது.

He literally rubbed his energy and enthusiasm on us.He was always the most smartly dressed and the most mischievous person in the shooting floor. As a person fortunate to direct this stalwart, I can vouch for the fact that he was indeed “ a director’s delight”. 

வசனங்களை வெரும் உமிழ்வாக இல்லாமல் அவரது body language, முக பாவம், குரல் ஏற்ற இரக்கங்கள், timing இவற்றோடு அவருக்கே தனித்துவமான சென்னைத் செந்தமிழ் அல்லது கர்னாடக இசையோடு கவரில் போட்டு காட்சியில் இடும் போது, கட் சொல்ல மறந்து காமிராவை ஓடவிட்டிருக்கிறேன். நான் ஸ்கிரிப்டில் கட் செய்த வசனங்களைக் கண்டும் காணாதது போல் சேர்த்து சொல்லும் passion கண்டு சிரித்துக்கொண்டே கட் சொல்லியிருக்கிறேன்.

“ஒங்க அடுத்த புது டிராமல நான் வேஷம் போடறேன்” என்று அவருக்கே உறிய பாணியில் நீலு அண்ணல் அறிவித்த போது நாங்கள் அலறினோம். ஆனந்தத்தில் அல்ல. இந்த VIP க்கு தகுந்த வசதி செய்து தரமுடியுமா என்ற பயத்தில். உடன் ஒப்புதல் சொல்ல முடியவில்லை. மையமாக தலையாட்டி வைத்தோம்..

கிரேஸி மோகனுக்கு கிரேஸி டைம்ஸ் டிவி தொடரில் மலைவாசியினருக்கும் நகர வாசிகளுக்கும் நடக்கும் கிரிக்கட் போட்டி என்ற ஒரு அற்புதக் கதை உதயமாக, அவசர அவசரமாக உதக மண்டல பிரியாணம் ஏற்பாடாகியது. இரயில் முன் பதிவு மிகவும் பின் பதிவாகிவிட்ட அவசரம். கிடைத்த டிக்கெட்டை கவ்விக் கொண்டு இரயில் பெட்டியில் தாவிய நேரம். குரட்டை சத்தம் கேட்டு நிமிர்ந்தால்... இரண்டாம் வகுப்பு Side Upper Berth ல் தன் ஆறடி உடம்பை அறை உடம்ப்பாக்கி ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தவர் நாங்கள் VIP Treatment தர முடியுமா என்று அஞ்சிய Very Intimate Personality நீலு அவர்கள். 


உதக மண்டலத்தில் சூரியன் உதயமாகும் முன் அண்ணல் கேட்ட வேஷம் கிரேஸி மோகன் மூளையில் உதயமாகி சாக்லெட் கிருஷ்ணாவில் இன்று வரை 700 முறை திகட்டாமல் தித்தித்து வருகிறது.


உலகில் எந்த முலையில் எந்த வேலையில் இருந்தாலும் அவ்வப்போது தவராமல் வரும் sms:  “Enyoing Your Jery film in Raj Tv now. Hilarious”.
விச்சு அண்ணா தயாரித்து கிரேஸி மோகன் கை வண்ணத்தில் நான் இயக்கிய “ஜெரி” நகைச்சுவைப் படத்தின் நிர்வாகப் பொருப்பு ஏற்றார் நீலு அண்ணல். சினிமாவிற்கே உண்டான தேவையற்ற ஆடம்பர செலவுகளை சிரித்தபடி குட்டி குட்டியே குள்ளமாக்கியவர். சினிமாவில் வேண்டாத வீண் செலவு விபரம் அறிய விரும்பும் இளம் தயாரிப்பாளர்கள் நீலு அவரிகளிடம் ஒரு Crash Course எடுத்துக் கொண்டால் அவர்கள் கஜானா Crash ஆகாமல் இருக்கும். 


பொது மக்களிடம் தனக்கு இருக்கும் புகழைத் தனக்காக உபயோகிப்பது இயல்பு. சிக்னலில் நிக்காமல் போகும் காரை இடைமறிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளே அமர்ந்திருப்பது ஒரு பிரபலம் என்று அறிந்ததும் அசடு வழியும் முகத்தை துடைக்க எடுத்த கையால் சல்யூட் அடித்து புறமுதுகு காட்டுவது இயல்பு.

அனால், இந்த பிரபலம் உனக்கு ஒரு உதவி உடனே தேவையென்று அறிந்தால், அமர்களமான டி ஷர்ட் ஜீன்ஸ் உடன் செண்ட் வாசனைத்
தூக்க, தன் மாருதி காரில் தாவி, சன்ஜை சுப்ரமணியனின் தோடி காதில் ஒலிக்க, வழியில் வாங்கிய வாசனைப் பான் வாயை நிறப்ப, வலியச்சென்று பல அரசாங்க வாயில்களைத் திறக்கவைத்து வெற்றி வாகை சூடித் திரும்பும் திறன் மட்டுமல்ல, மனமும் படைத்தவர். எங்கள் குழுவின் கடை நிலை ஊழியர் கூட கையில் பாஸ் போர்ட் வைத்திருக்கும் கதையல்ல நிஜம் நீலு அவர்களின் மனம்.

Let me put forth two prayers to God:
1.    Let this phenomenon by name R.Neelakantan continue to live the way he likes
2.    If we happen to live this long let us live like him too.